Friday, April 19, 2013

கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாது





அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று கூறியுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஒரு பிரதமரை ஓர் அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்பதை எப்படி நம்ப முடியும் என்றும் கருணாநிதி வினவியிருக்கிறார்.  செய்தியாளர்களிடம் புதுடில்லியில் தனியே பேசுகையில், தனது பிரச்சினை குறித்து 100 பக்க விளக்க அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழுவிடம் கையளிக்க இருப்பதாகவும் தனது அறிக்கை தான் குற்றமற்றவன் என்பதையும், பிரதமரை ஆலோசித்த பிறகே அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து முடிவுகளையும் தான் எடுத்ததையும் உறுதி செய்யும் என்றும் ராசா கூறியுள்ளார்.

இதனிடையே, கூட்டு விசாரணைக் குழுவின் அறிக்கை ஊடகங்களுக்கு கசியவிட்டிருப்பது நாடாளுமன்றத்தின் உரிமைகளை அவமதிப்பதாகும் என பாஜக கூறியிருக்கிறது. ஆனால், மத்திய அரசோ கூட்டுக்குழுவின் அறிக்கை முடிவு செய்யப்படவே இல்லை என்கிறது.

மத்திய அமைச்சர் கபில் சிபல், நாடாளுமன்ற கூட்டுக் குழு விரைவில் கூடி தனது அறிக்கையினை இறுதி செய்தபின் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும், அதற்குள் அவசரப்பட்டு எவரும் எக்கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

  கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதாவது என்பதனை நமது கூட்டுக்கொள்ளையர்கள் தெளிவாக நிரூபித்திருக்கிறார்கள்.  கொள்ளையடித்தது இப்போது அவர்களாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி மொத்தம் எத்தநை கொள்ளையர்கள் எனபதுமட்டுமே உறுதி செய்யப்படவேண்டும். அடுத்து அதையும் அவர்களே தன் வாயால் பட்டியலிட்டுவிடுவார்கள் . அடுத்து நமது ரோபோ நான் ரோபோமட்டும்தான் ப்ரோகிராம் செய்தது எல்லாம் புன்னியவதி என்று சொல்லும்.

No comments:

Post a Comment