Tuesday, February 5, 2013

எங்கே சென்றார்கள் கொடை வள்ளல்கள்?

 வள்ளல் காஞ்சி பச்சையப்ப முதலியார், வள்ளல் டாக்டர். ஆர்.எம் அழகப்பச் செட்டியார். வள்ளல் பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் என பல வள்ளல்கள் ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளி கல்லூரிகளை கட்டி கொடுத்தவர்கள் நிலங்களை வழங்கியவர்கள் என இருந்தார்கள். ஆனால் இன்று யாரும் அப்படி இல்லை ஒரு வேலை அப்படி செய்ய நினைப்பவர்களுக்கு பிழைக்கத்தெறியாதவன் என்ற பட்டம் தான் மிஞ்சும்.

  ஏன் இந்த அவல நிலை? இன்று மக்களிடம் வள்ளல் தன்மை வளராததற்கு என்ன காரணம்?  தன்னிடம் உள்ள சொத்துக்கள் தனக்கு போதும் என்ற நிலை வரும்போது தான் ஒருவனுக்கு இந்த சமூகத்திற்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்னம் வரும். ஆனால் இன்றைய நிலமையோ முற்றிலும் வேறானது ஒருவர் எந்த அளவுக்கு பணம் சொத்துக்கள் வைத்திருந்தாலும் அது வருக்கும் அவரது குடும்பத்திற்கும் போதுவது இல்லை.

   சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான அருணாச்சலம் என்ற திரைப்படத்தில் நமது ரஜினிகாந்த் அவர்கள் ஒரு மாதத்தில் 30 கோடி ரூபாவை செலவழிக்க படாத பாடு படுவார் இன்று அந்த 30 கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தாலும் ஒரே நாளில் செலவு செய்துவிட முடியும். நமது நாட்டில்  நுகர்வுக்கான வழிகளின்மூலம் மக்களின் பணத்தை ஒரு சில புள்ளிகளில் குவிக்க கலாச்சாரமும் நாட்டின் பொருளாதார கொள்கைகளும் அந்த அளவுக்கு இருக்கின்றன. ஒவவொரு படியிலும் உள்ள மக்களின் செலுவுத்திறனுக்கு ஏற்றவாறு மக்களிடம் இருந்து பணத்தை உறிஞ்சுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் இன்று உள்ளன.

   அனைவரும் வசதியாக வாழ நினைக்கலாம் தவரில்லை ஆனால் பகட்டாக வாழக்கூடாது. பகட்டுக்கும் வசதிக்கும் சிறிய வித்தியாசம்தான் அதிகமானோருக்கு அது தெறிவதும் இல்லை. ஒரு சட்டையின் விலை 300 ரூபாய் என்றால் ஒரு வாரம் பயன் படுத்த 7 சட்டைகளை வாங்கிக்கொள்வது வசதி இதில் எந்த தவரும் இல்லை அதே பருத்தி சட்டையை ஓட்டோ, லூயி பிளிப்ஸ் என்ற பிராண்டுகளின் பெயரில் 3000 ரூபாய்க்கு வாங்குவதும் ஒவ்வொரு சட்டையின் நிறத்திற்க்கு ஏற்ப்ப காலணிகள் பெல்ட்கள் வாட்ச்கள் என வாங்குவது பகட்டு.

    இந்த பகட்டு காரர்கள் நான் 3000 ரூபாய் கொடுத்து சட்டை வாங்கினேன் பெல்ட் வாங்கினேன் 10000 ரூபாய் கொடுத்து ஷீ வாங்கினேன் என்று அடுத்தவரிடம் கூறி பெருமை அடித்துக்கொள்வார்கள். நீங்கள் கார், டீவி , ஏசி, மெத்தை என எதுவானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் வசதியாக இருங்கள் தப்பில்லை ஆனால் 5 லட்சத்தில் கார் வாங்கினால் அது வசதி 50 லட்சத்தில் கார் வாங்கினால் அது பகட்டு என்பதை தெறிந்து கொள்ளுங்கள்.

  50 ரூபாய்க்கு சாப்பிடும் உணவை 1000 ரூபாய் கொடுத்து ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டாலும் அது தொண்டை குழிக்கு கீழ் சென்றால் அதற்கு பெயர் வேறாக இருக்கும் ஸ்டார் ஓட்டலில் தின்றவன் மலம் மட்டும் என்ன நறுமணமா வீசும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பகட்டிற்க்காக  நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் உணவுக்குகூட வழியின்றி கஷ்ட்டபடும் எவனோ ஒரு ஏழையின் பையில் இருந்து நீங்கள் திருடியதாகவே அர்த்தம்.

  வசதியாக வாழுங்கள் வள்ளாக மாறுங்கள்
 வாழ்த்தட்டும் உங்களை வருங்கால தலைமுறை.

 

No comments:

Post a Comment