Sunday, January 20, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 1

இப்போது நமது சமூகத்தில் பணக்காரன் ஏழை பிச்சைக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கொலைகாரன் கொள்ளைக்காரன் என பலதரப்பட்ட மக்கள் இது ஏன்?. அடுத்தவனைக்காட்டிலும் தான் உயர்வாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அது முதலில் தன் குடும்பத்திலேயே ஆரம்பமாகி விடுகிறது அனைவருக்கும் மற்றோர் எண்ணம், தாம் செய்வது தாம் சொல்வது தான் சரியாக இருக்கும் நடக்கவேண்டும் என்றும் சிலர் ஒரு படி மேலே போய் அது தவறாக இருந்து தவறு என தெரியும் பட்ச்சத்தில் தன் முழுபலத்தையும் பயன்படுத்தி அதுதான் சரி அதுதான் உண்மை என அடுத்தவரை நம்பவைப்பது.

ஒரு சிலர் இதர்க்காக விபரீதமான முடிவுகள் வரை எடுப்பர் தன் மனம் தான் சொல்வது செய்வது தவறு என்பதை ஏற்க்க மறுக்கிறது. தன் கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவரின் கருத்து தவறாகவே இருக்கவேண்டும் என நினைப்பது தன்னைவிட அறிவிலும் பனத்திலும் பலத்திலும் திறத்திலும் தன் அருகில் இருப்பவர் உயர்ந்து வரக்கூடது என்ற எண்ணம். இவை அனைத்தும் தனக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது தான் வெளிப்படும். இப்படி ஒட்டுமொத்தமாக சொன்னால் குழப்பமாக இருக்கும் எனவே தனித்தனியாக பட்டியலிடுவது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.
எதிர்பாலினத்தின் மீதான வெளிப்பாடு.

ஓர் ஆண் என்ன நினைக்கிறான் பெண்கள் தம்மைவிட அறிவும் திறமையும் குறைந்தவர்களாக கருதுகிறான் அடுத்து பெண் என்பவள் ஆணுக்கு அடிமையாக அல்லது கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று எண்ணுகிறான். பெண்ணும் அப்படித்தான் நினைக்கிறாள் ஆனால் காலம் அவளை செயல்பட முடியாமல் கட்டிப்போட்டிருக்கிறது. சிறிது வாய்ப்புகிடைக்கும் போது சீறிப்பாய்கிறாள் ஆனால் பெண்ணுக்குறிய ஒரே குறைபாடு ஆண்களைவிட உடல் அமைப்பு வலிமையில் குறைந்திருக்கிறாள் பிள்ளை பெறும் வேலைவேறு இருக்கிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் படிந்த பெண்ணை பாலியல் ரீதியாக உறவு கொள்ள மனைவி என்று வரும் போது (இது நம்மஊர் சமாச்சாரம்) அவளை ஒரு போகப்பொருளாக கருதுகிறான் அவள் தன்னிடம் மட்டும்தான் இன்பம் அனுபவிக்கவேண்டும் என்றும் தான் யாரிடம் வேண்டுமானாலும் இன்பம் பெறலாம் என்று நினைக்கிறான். பெண்ணும் தன் கணவன் தன்னிடம் மட்டுமே தான் இன்பம் பெறவேண்டும் என்றும் தாம் அடுத்தவருடன் போகலாமென்று நினைக்கிறாள்.

இந்த எதிர்ப்பார்ப்பில் இருவருக்குமே நியாயம் இல்லை ஆண்கள் எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும் உதாரணத்திற்க்கு நமீதாவோ இல்லை சிரேயாவோ தயார் இலவசம் என்று சொல்லட்டும் எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்வார்கள் இதற்க்கு முன் அவர்கள் எத்தனை பேருடன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார்கள். சூர்யாவும் சிம்புவும் ரெடினு சொன்னாலும் எல்லா பெண்களும் ஓகேனுதான் சொல்வாங்க ஆனா எத்தனை ஆண்கள் இதை ஒத்துக்கொள்வார்கள் உடனே கலாச்சாரம் அது இதுனு ஆரம்பித்துவிடுவார்கள். ( நமீதா,சிரேயா,சூர்யா,சிம்பு எல்லாம் என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கதான் இப்ப இண்டஸ்ட்ரீல ரொம்ப கிளாமரா இருக்கீங்க கண்டிப்பா எல்லாருக்கும் உங்கமேல ஆசை இருக்குமுனு ஒரு நம்பிக்கை)

ஆனால் யாரும் ஒன்றை சிந்திக்க மறந்து விடுகிறார்கள் தான் ஒரு பெண்ணை நாடும் போது அவள் அடுத்தவன் மனைவியோ அல்லது அடுத்தவனுக்கு மனைவி ஆகப்போகிறவளோ இப்படி ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்ச்சட்த்தில் தன் மனைவி மட்டும் யாரையும் நாடமாட்டாள் நாடியிருக்கமாட்டாள் என்பதில் என்ன நிச்சயம் இது அனைவருக்கும் முள்ளாக குத்தத்தான் செய்யும். இவன் நாடிப்போகும் பெண்கள் என்ன இயந்திரத்தாலா செய்தார்கள் அப்படி ஒன்றும் இல்லையே. ஒரு ஆண் தன்பலத்தால் செல்வாக்கால் தன்மனைவியை வீட்டுக்குள்ளே வைத்திருந்தாலும் இச்சை வந்துவிட்டால் வேலைக்காரனை இல்ல வாட்ச்மேனையோ நாடமாட்டாள் என்று என்ன நிச்சயம் மேலும் பெண்கள் காவலுக்கு வைத்தாலும் ஓரினச்சேர்க்கையாளாராக மாறமாட்டாள் என்று என்ன நிச்சயம்.

ஒரு பெண் தலைமை பொருப்பில் இருப்பதை எந்த ஒரு ஆணும் சுலபத்தில் ஏற்றுக்கொள்வதே இல்லை திருமணம் ஆனால் அந்த அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக்கோள்ள பார்க்கிறான். திருமணமாகாத பெண்கள்தான் அந்த பொருப்புகளை வகிக்கமுடிகிறது. இதில் பெண்களுக்கும் வசதியாக போய்விட்டது பொருப்பு ஆண்களிடம் சென்றுவிட்டது இனி தலைவலி இல்லை ஆண் சம்பாதிக்கப்போகிறான் பொருப்புகளை கவனிக்க போகிறான் நாம் அவன் நிழலிலே ஒன்றிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆண் தன் திறமையை நிரூபிக்கவும் தன் பொருப்புகளை கவனிக்கவும் அதிகபட்ச சிரமத்தை மேற்கொள்ள தயாராக இருக்கிறான் எதைவேண்டுமானாலும் செய்கிறான். பெண்கள் சிரமத்தை மேற்கொள்ள தயாராக இல்லை தனக்கு கிடைக்கும் சலுகைகளை பயன் படுத்திக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு ஆண்களை கவரும் ஒரு கவர்ச்சிப்பொருளாகவே இருக்கிறாள்.

திருமண விஷயதில் எடுத்துக்கொள்வோம் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கும் ஆண் வேலைக்கே போகாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வான். ஒரு வேலைக்கு போகும் பெண் கண்டிப்பாக தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் ஆணைத்தான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள். ஒரு படித்த பெண் தன்னை விட அதிகம் படித்த ஆணைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள் இதுதான் உண்மை வேண்டுமானால் திருமணத்தகவல் இணையதளத்தில் போய் பாருங்கள். பெண்கள் எப்போதுமே தன்னைவிட படிப்பிலும் சம்பளத்திலும் அதிகம் உள்ள ஆண்களை எதிர்ப்பார்க்கும் போது அந்த ஆண்கள் இந்த பெண்களை அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.

அடுத்து வரதட்சணை இது தான் அனைத்து இடங்களிலும் மிகவும் உணர்ச்சிகரமான சங்கதியாக பேசப்படும் ஒன்று இதுவரை ஒரே ஒரு புகாராவது திருமணம் ஆகாத ஆணின்மீது வரதட்சணை கேட்டதாக புகர் கொடுக்கப்படிருகிறதா? பணக்காரவீட்டுக் காதலனைத்தவிர. இப்ப எதுக்கு வரதட்சணை பற்றியெல்லாம் இந்த தலைப்புக்கு வருகிறது என்று கேட்கலாம் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. ஒருவர் தன் மகளுக்கு வரன் பார்க்கும் போது அரசாங்க உத்தியோகம் பார்கிறானா, தன்னைவிட பணக்காரனா, கை நிறைய சம்பாதிக்கிறானா, நிறைய படிச்சிருக்கானா அவனுக்கு நாம் வேலைவாங்கி கொடுத்துக்கலாம்(வேலை சூப்பர்மார்க்கட்ல விக்கறதா நெனப்பு) இப்படிதான் மாப்பிள்ளை பார்ப்பாங்க.

ஆனா இவரோட பெண்ணோ கொஞ்சம்தான் படிச்சிருக்கும் எங்கயும் வேலையும் செய்யாது இதலவேற சொல்லுவாறு பொண்ண உக்காரவச்சி சோறுபோடர மாப்பிள்ளையா பாருனு( இது என்ன பிராய்லர் கோழியா எந்த வேலையுமே வாங்காத முட்டகூட போடாத நேரா 45 நாள்ல வெட்டி எடைபோட). இவரோட பெண் காலம் முழுதும் சிரமப்படாமல் வச்சி காப்பாத்தனும்மாம்! இப்படி சொன்னா எவன் தான் வரதட்சணை கேக்கமாட்டான் பெண் பார்க்கும் போதும் சரி தரோம்முனு தலைய ஆட்டவேண்டியது அப்புறமா முடியலனு சொல்லும் போது பிரச்சினை ஆனா வரதட்சணை கொடுமையினு போலீஸ்ல கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது. இது வரைக்கும் கணவனைவிட அதிகா சம்பாதிக்கிற இல்ல கணவனோட வீட்டை விட வசதி அதிகம்படைத்த வீட்டுப்பெண் அல்லது வேலை செய்யாத கணவன் வேலைசெய்ர பொண்டாட்டிய வரதட்சணை கொடுமை பண்ணினதா ஏதாவது வழக்கு இருக்கிறதா?. ஏன் அதிகபட்சமாக திருமணமானால் பெண்கள் கணவன் வீட்டில் இருக்க ஆசைப்படுகிறார்கள். மனைவியின் வீட்டுக்கு கணவனை கூட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே. அப்பொழுது இந்த சிக்கலே வராது இல்லையா?

அடுத்து பொது இடங்களில் தர்ம அடி,பொதுமாத்து இதெல்லாம் பார்த்திருப்பீர்கள் இதில் அதிகமாக பெண்கள் விஷயமாகத்தான் இருக்கும்.அடிப்பதும் அடிவாங்குவதும் ஆண்களாகத்தான் இருக்கும். ஒரு ஆணை காம இச்சைக்காகவோ அல்லது காதலை சொல்லவோ அழைத்தால் அதை அருகில் இருப்பவர்களிடம் கூறினாலோ யாரும் கண்டுகொள்வதே இல்லை அவன் போனதும் பக்கத்தில் இருக்கிறவன் முயற்சிசெய்வான். இதே ஒரு ஆண் பெண்ணிடம் சொல்லும்போது அந்தப்பெண் சொல்லிமுடிப்பதற்க்குள் அடிக்க ஆரம்பித்துவிட்டு இருப்பார்கள் ஏன் இந்த மன நிலை என்று நீங்கள் யோசித்திருப்பீர்களா.

அதிகமாக வெளியில் நடமாடுபவர்கள் ஆண்கள்தான் அவர்களுக்கு ஒரு எண்ணம் அடுத்தவனுக்கு அந்த பெண்கிடைக்கக்கூடாது அடுத்தவன் சந்தோஷமாக இருக்ககூடாது என்ற எண்ணம் ஒரு நொடிப்பொழுதில் அவனுக்கு உண்டாகிவிடுகிறது. உடனே அதனை அவன்மீது வெளிப்படுத்துகிறான். அப்படி அடிக்கிற எவனுக்கும் காம எண்ணம் இல்லை என்று நினைக்காதீர்கள் அவர்கள் மனதில் தான் காம எண்ணம் வக்கிரமாக இருக்கும். அவ்வளவு சீக்கிரம் எந்த பெண்ணும் அடிக்க போவதில்லை ஒரு சிலர் அடுத்தவர் மெச்ச அல்லது என்னை விட்டு அவளபோய் கூப்பிட்டயேனு வேணும்னா அடிக்கலாம். ஆனால் பெண்களை யாரும் இந்த இடத்தில் கண்டிப்பதே இல்லை மற்ற பெண்களும் எப்படியும் மற்ற ஆண்கள் சிபாரிசுக்கு வரமாட்டாங்க நாம் ஏன் வீணா இவகூட சண்டைபோடனும்னு நினைத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete