Saturday, December 15, 2007

செல்போன்ல முட்டை சமைக்கிறாங்களாம் மக்களை பயமுறுத்தாதீங்க

இரண்டு செல்போன் களுக்கு நடுவில் முட்டை வைத்து அதன் அருகில் ஒரு மியுசிக் சிஸ்டம் வைத்து குத்து பாட்டுகூட போட்டுவிடலாம் ரெண்டு போனுக்கும் கால் போட்டு வைக்கனும் அவ்வலவுதான் 40 நிமிடத்தில முட்டை வெந்து போய்டும் . செல் போனில் இருந்துவருவது மின்காந்த அலைகள் நுன் அலை அல்ல நுன்லையில் தான் அதிக சூடு ஏற்ப்படும் . மின் காந்த அலைகளால் துடிப்பு மட்டுமே ஏற்ப்படுத்தமுடியும் வெப்பத்தை அல்ல.

இந்த மாதிரி பன்னா முட்டை வெந்துபோகும் தான் ஆனா பேன்ட் பாக்கெட்ல போட்டா அது வெந்துபோய்டும்னு சொல்றீங்களே அதான் ஓவர். யாரும் பயப்பட எல்லாம் தேவையில்லை முட்டை வேகும் உண்மை. ஒரே ஒரு செல்போன் வெச்சி ஒருமாசம் பேசனாலும் முட்டை அழுகிதான் போகுமே ஒழிய வெந்துப்போகாது. யாருப்பா சொன்னது ரொம்ப காஸ்ட்லினு சி யு ஜி மொபைல் 24 மனி நேரமும் இலவசம் தானே. இது சயின்டிபிக்கா சொல்லாமா நம்மல எல்லாம் வெறுப்பேத்ததான். ரெண்டு மொபைலும் பக்கத்தில வச்சி சத்தம்போட்டா என்ன ஆகும் ஒரே சத்தத்தை இரண்டு மொபைல்களும் தன் ஸ்பீக்கர்வழியாக வெளிப்படுத்தும் ஒரே அளவான மின்காந்த அலைகளும் ஒலி அலைகளும் எதிர் எதிர் திசையில் பயனிக்கும் போது இரண்டும் சந்திக்கும் சமதொலைவில் உள்ள புள்ளியில் ஒத்ததிர்வு அதாவது ரெசோனன்ஸ் உண்டாகும்.

இந்த ஒத்ததிர்வை உண்டாக்கும் சோர்ஸ்களின் பலத்தை பொருத்து முட்டை என்ன பாலமே தூள் தூளாக போய்விடும் இதனால்தான் பாலங்கள் நிரந்தரமாக இனைக்கப்படாமல் துண்டு துண்டாக கட்டப்படுகிறது பாலம் நிலையாக இருக்குமானால் ஒரேஅளவு அதிர்வுடன் இரண்டு வாகனங்கள் வரும் போது பாலம் உடைந்துவிட வாய்ப்பு உள்ளது. இப்படி ஏற்ப்படும் ஒத்ததிர்வின்காரனமாக அந்தபுள்ளியில் ஏற்ப்படும் அழுத்தமானது வெப்பமாக மாற்றப்படுகிறது இதுதான் முட்டை வேக காரணமாக இருக்கிறது நானும் அலைபேசி துறையில் பனிபுரிபவன் தான் எல்லா ஆரய்ச்சியும் முட்டையவச்சி செய்து பாத்தாச்சி என்கேஜ்ஜாகவே இருந்ததால் அலுவலகத்தில் இருந்து ஆப்பு வாங்கியதுதான் மிச்சம்.

3 comments: