Monday, December 17, 2007

மக்களின் மன நிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 10

மது அருந்தியவன் மன நிலை.

மது அருந்தியவுடன் மனிதனின் பலம் அதிகரித்துவிடுகிறது தனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஆனால் மந்தமான புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. அதாவது உட்கார்ந்துகொண்டே ஓடுவது போல் ஒரு தெம்பு வரும். அவன் குடித்த மதுவானது தன் வயிற்றினுள் இருக்கும் உணவு மற்றும் கொழுப்புகளை வேகமாக சக்தியாக மாற்றுகிறது. மேலும் இந்த மாற்றப்பட்ட சக்திதான் அவனை ஒரு சாதாரண மன நிலையில் இருந்து அசாதாரண மன நிலைக்கு மாற்றுகிறது. இப்போது அவன் மனதில் எந்த வித உணர்ச்சிகள் இறுக்கங்கள் இருந்தாலும் அப்படியே அதற்க்கு எதிராக மாறிவிடுகிறது.

இப்போது அவனுக்கு பயம் அச்சம் வெட்கம் எல்லாம் போய்விட்டு இருக்கும் சாதாரண நிலையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்தானோ அதனை எல்லாம் செய்ய இப்போது எதுவும் தடையாக இருப்பதாக தெரியாது. பிறர் என்ன சொல்வார்கள் என்ன நினைப்பார்கள் என்ற எதுவும் அவனுக்கு தோன்றாது. அப்போது அவன் ஒரு புதிய உலகிற்க்கு வந்திருப்பான் அங்குதான் அவன் உன்மையான உலகத்தில் இருப்பான். அவன் மனம் தற்செயலாக சிந்தனைக்கு விடுப்பு கொடுத்திருக்கும் இப்போது எதை பற்றியும் சிந்திக்க முடியாது. மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே செயலாக வெளிப்படுத்துகிறான். யாரும் ஒருவனை குடித்து விட்டு உளறுகிறான் என்று சொல்லக்கூடாது அப்போதுதான் உண்மையாக அவன் மனதில் என்ன இருக்கிறதோ அதை கூறுவான் செய்வான்.

மது அருந்துவதனால் அவன் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறான் என்று சொல்வார்கள் அதுவல்ல உண்மை மது அருந்தியவன் அனைவரும் ஒரேமாதிரியான செய்கைகளை செய்வதில்லை. ஒழுங்கீன மனது கொண்டவன் தான் ஒழுங்கீனமாக நடந்து கொள்வான். இப்போது எது எது உண்மையாகவே பிடிக்கவில்லையோ அதன் மீது நேரடியாக வெறுப்பை எந்த வடிவத்தில் காட்டவேண்டும் என்று சாதரண நிலையில் நினைத்தானோ அதைத்தான் அப்போது காட்டுவான். உண்மையான அன்பு எல்லாம் அப்போது தான் வெளிப்படும் கோபமும் அப்படிதான் வெளிப்படும் ஒருவனை அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் அப்போது அவன் கண்ணெதிரில் தென்பட்டால் அடித்துவிடுவான். இப்போது கூச்சம் வெட்கம் எல்லாம் போய்விட்டு இருக்கும் எதற்கும் வெட்கப்படவோ கூச்சப்படவோ மாட்டான். அவன் செய்கை அனைத்தும் யாருக்கும் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் என்ன செய்வானோ அதைத்தான் குடித்தபோது செய்வான்.

மீண்டும் சொல்கிறேன் குடித்துவிட்டு போதையில் உளறுகிறான் என்று நினைக்காதீர்கள் அவன் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். ஒரு சிலர் போதையில் தற்கொலை கூட செய்து கொள்வார்கள் அதற்க்குக் காரணம் அவர்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்திருக்கும் நாம் செத்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும். அதை தன் குடும்பம் குழந்தைகள் தாய் தந்தை குடும்ப கவுரவம் போன்றவற்றின் எதிர்கால நிலை கருதி அதை செயல் படுத்தாமல் இருப்பர் அந்த நபர் குடிக்கும் போது எல்லா தடைகளும் எடுபட்டு போய்விடுகிறது இப்போது தான் மட்டுமே என்ற எண்ணம் தோன்றுவதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்தவன் செய்துகொள்கிறான்.

இப்போது அவன் மனம் சுய சிந்தனையில் இல்லாமல் இருப்பதனால் அந்த கணத்தில் அவனது தேவையை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் அப்போது நம்பிக்கைகுறியவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதை உண்மை என நம்புகிறான் அவர்கள் கேட்பதைக் கொடுக்கிறான் அவர்கள் சொல்வதை செய்கிறான். இதனால் அவனுக்கு எத்தனை பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது சட்ட விரோதமான செயல்கள், கொலை செய்தல் , அடித்தல், தன் மனைவியை கூட நம்ப மறுப்பது, தன் சொத்து பணம் முதலானவற்றை இழந்துவிடுவது, கேட்கும் இடங்களில் யோசிக்காமல் கையெழுத்திடுவது என சொல்லிக்கொண்டே போகலாம், இந்த தருணத்தில் மற்றொரு பெரிய பிரச்சினை வர வாய்ப்புகள் உள்ளது காம இச்சையில் உள்ளோரை அப்போது இச்சை தீர வாய்ப்பளித்து அதை படமெடுத்து மிரட்டுவது போன்ற செயல் கூட நடக்கலாம்.

நண்பர்களே விழிப்பாய் இருங்கள் யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது புதிதாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் சற்று கவனாக விழிப்புடன் இருக்கவும். ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை எண்ணம் தோன்றியவர்கள் தயவு செய்து குடிக்காதீர்கள் அது உங்களின் முடிவுக்கு வாய்ப்பாகிவிடும். மேலும் அலுவலக பார்ட்டிகளில் குறைவாக குடிப்பது நல்லது முடிந்தவரை கையில் ஒரு கோப்பை வைத்துக்கொண்டு அப்படியே நேரத்தை கடத்திவிடுவது சாலச்சிறந்தது. இல்லையெனில் சில சொல்லாமல் மறைத்த சொல்லக்கூடாத உண்மைகள் விசயங்கள் எல்லாம் உன்னிடம் இருந்து வாக்குமூலங்களாக பெறப்பட்டுவிடும் மறுநாள் என்ன கூறினோம் என்று நீங்களே மறந்திருப்பீர்கள்.

1 comment: